கால்நடைகளை வேட்டையாடிய ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே கால்நடைகளை வேட்டையாடிய ஆண் சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதனால் அப்பகுதிமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வனப்பகுதியை ஒட்டி உள்ள குப்புசாமி என்பவரது தோட்டத்தில் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று அதிகாலை அப்பகுதிக்கு வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கூண்டில் சிக்கியது ஆண் சிறுத்தை என்பதை உறுதி செய்தனர்.  இதையடுத்து சிறுத்தையை வாகனத்தில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்லும் நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்….

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை