காலிப்பணியிடங்கள் நிரப்ப கோரி சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

 

விருதுநகர், ஜூன் 26: தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் வருவாய் கிராம உதவியாளர்களுககு வழங்கும் மாத ஓய்வூதியம் ரூ.6,750ம் குடும்ப ஓய்வூதியம் சத்துணவு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும். அனைத்து துறை காலிப்பணியிடங்களில் பணிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளித்து காலமுறை ஊதியத்தில் பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Related posts

புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யகோரி 4வது நாளாக வழக்கறிஞர் சங்கத்தினர் போராட்டம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கு 15ம்தேதிவரை விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ₹659.32 கோடி கடன் வழங்க இலக்கு