காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை: போடியில் 6 கடைகளுக்கு அபராதம்

போடி, ஜூன் 9: போடி பகுதியில் காலாவதியான உணவு பொருட்கள் அதிக அளவில் கடைகளில் விற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். அதனடிப்படையில்,போடி நகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மதன் குமார், ஜனகர் ஜோதிநாதன், மணிமாறன் ஆகியோர் போடி பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது காலாவதியான உணவுப் பொருட்களான கூல்ட்ரிங்க்ஸ், பிரட், அழுகிய பழங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும்,தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதையும் கண்டறிந்து அவற்றையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த ஆறு கடைகளுக்கு மொத்தமாக ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்து, னி வரும் காலங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தால் கடைகள் லைசென்ஸ் ரத்து செய்து கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்