காரைக்காலில் புயலுக்கு பின் கடலுக்கு சென்று கரை திரும்பிய மீனவர்கள்

 

காரைக்கால்,டிச.12: காரைக்காலில் புயலுக்கு பின் கடலுக்கு சென்று மீனவர்கள் கரை திரும்பினர். இதனால் மீன் வாங்க ஏராளமான வியாபாரிகள் குவிந்தனர். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. கடந்த 10 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்த நிலையில் காரைக்கால் மீனவர்கள் மிக்ஜாம் புயல் ஆந்திர பகுதியில் கரையை கடந்ததை தொடர்ந்து கடந்த 5 தினங்களுக்கு முன்பு காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவ கிராம மீனவர்கள் மீன் பிடி தொழிலுக்கு கடலுக்கு மகிழ்ச்சியோடு சென்றனர்.

இந்த நிலையில் மீன்பிடித் தொழிலுக்கு கடலுக்கு சென்ற மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு காரைக்கால் மீன் பிடித்து துறைமுகத்திற்கு மகிழ்ச்சியோடு கரை திரும்பினார்.
இதனை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்து ஆர்வத்தோடு மீன்களை வாங்கிச் சென்றனர். கனவா மீனில் வரத்து அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் விரும்பி வாங்கி சென்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை