காரியாபட்டியில் சேதமடைந்த சந்தைப்பேட்டை வணிக வளாக கடைகள்: பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு

 

காரியாபட்டி, ஜூலை 9: காரியாபட்டி பேரூராட்சி நிர்வாகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு முன்பு சந்தைப்பேட்டையில் வணிக வளாக கடைகளை அமைத்தது. தற்போது இந்த வணிக வளாகத்தில் உள்ள சில கடைகள் சேதமடைந்துள்ளன. இந்தக் கடைகள் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கின்றன. காரியாபட்டி பேரூராட்சி நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு கலைஞர் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டு கூடுதலாக கடைகள் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் சாய்ராஜ் காரியாபட்டியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மழைநீர வடிகால பணிகளை விரைவாக முடிக்க ஒப்பந்த காரர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு சந்தைப்பேட்டையில் கட்டிய வணிக வளாகத்தில் உள்ள சேதமடைந்த கடைகளையும் பார்வையிடார். ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் செந்தில், செயல் அலுவலர் சந்திரகலா, பொறியாளர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை