காரிமங்கலம் வாரச்சந்தையில் 18.50 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

காரிமங்கலம்: காரிமங்கலம் வாரச்சந்தையில் 18.50 லட்சத்திற்கு தேங்காய் விற்பனையானது. காரிமங்கலத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மதியம் முதல் தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் காரிமங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதி மட்டுமின்றி காவேரிப்பட்டணம், வேலம்பட்டி, பண்ணந்தூர், அரசம்பட்டி, நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி, புலியூர், பாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். சுமார் ஒன்றரை லட்சம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ₹7 முதல் ₹12 வரை பல்வேறு ரகங்களில் தேங்காய் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் ₹18.50 லட்சம் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். கடந்த வாரத்தை காட்டிலும் தேங்காய் வரத்து அதிகரித்த போதிலும், விலையில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை