காரிமங்கலம் அருகே முள்ளங்கி அறுவடை மும்முரம்-வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

தர்மபுரி : காரிமங்கலம் அருகே முள்ளங்கி அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உழவர் சந்தையில் அதிகபட்சம் கிலோ ₹12க்கு விற்பனை செய்யப்பட்டது.தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், பாலக்கோடு, தர்மபுரி, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய வட்டங்களில், சுமார் 600 ஏக்கர் பரப்பில் முள்ளங்கி சாகுபடி செய்யப்படுகிறது. பயிரிட்ட 40 நாட்களில் இருந்து முள்ளங்கி அறுவடைக்கு வருகிறது. மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் பெய்த மழையால், நீர்நிலைகள் நிரம்பியதால், முள்ளங்கி அறுவடை சீசன் தொடங்கியுள்ளது. காரிமங்கலம், அனுமந்தபுரம், மோட்டுப்பட்டி பகுதிகளில், அறுவடை பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சீசன் துவங்கி உள்ளதால், சந்தைக்கு முள்ளங்கி வரத்து அதிகரித்து, விலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ முள்ளங்கி ₹30க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ₹15க்கு விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒருகிலோ ₹10 முதல் 12க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘முள்ளங்கி அறுவடை செய்யப்படும் விவசாய தோட்டத்தில் கிலோ ₹8க்கு வியாபாரிகள் வாங்குகிறார்கள். கூலி உள்ளிட்ட செலவுகள் கட்டுப்படியாகிறது,’ என்றனர்….

Related posts

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!