காய்கறி விலைகள் கிடு கிடு உயர்வு வெள்ளரிக்காய் கிலோ ₹100 ஆனது

நாகர்கோவில், நவ.26 : கார்த்திகை மாதம் முதல் தை வரை சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் நடைபெறும் காலம் ஆகும். இந்த நாட்களில் அதிகளவில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய செல்வார்கள். இந்த மாதத்தில் சைவ உணவுகளை மட்டுமே அதிகம் பேர் உட்கொள்வார்கள். எனவே கார்த்திகை, மார்கழி, தை மாதம் வரை காய்கறிகளின் விலை அதிகமாக இருக்கும். முட்டை, இறைச்சி விலைகளின் விலை குறையும். எனவே கடந்த 17ம்தேதி கார்த்திகை மாதம் 1ம் தேதி பிறந்தது. அதில் இருந்து காய்கறிகளின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழையும் அதிகமாக பெய்து வருவதால் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.

குமரி மாவட்டத்திலும் காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. கடந்த சில நாட்களாக வெள்ளரிக்காய், புடலங்காய் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளரிக்காய் ₹20க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் படிப்படியாக விலை உயர்ந்து, நேற்று ஒரு கிலோ வெள்ளரிக்காய் ₹100-க்கு விற்பனையானது. புடலங்காய் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ₹35க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ₹70 ஆக உயர்ந்துள்ளது. மழை காரணமாக புடலங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறினர். இஞ்சி ₹160, பூண்டு ₹300 ஐ தொட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை