காந்திகிராம் பல்கலையில் இந்திய யோகா தர நிர்ணய கூட்டம்

நிலக்கோட்டை, நவ.25: திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 2023ம் ஆண்டுக்கான இந்திய யோகா தரநிலை மேம்பாட்டுச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இந்திய தரநிலை ‘யோகா மையம்-சேவை தேவைகள்’ பற்றிய ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) டாக்டர் ராதாகிருஷ்ணன், பேசினார். இந்திய தரநிர்ணய அமைவன இயக்குனர் மதுரை தயானந்த் முன்னிலை வகித்தார்.

பல்கலைக்கழக சமூக அறிவியல் துறையின் டீன்(பொறுப்பு) டாக்டர் மணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம் உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குநர் டாக்டர் சுகுமார், மதுரை மண்டல இணை இயக்குனர் ஹேமலதா, புதுடெல்லி துணை இயக்குனர் டி.சந்தோஷ் ஆகியோர் பேசினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய தரநிலை தொடர்பான தொழில்நுட்ப கேள்விகளுக்கு மின்னஞ்சல் அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

Related posts

இளம்பெண் திடீர் உயிரிழப்பு

ராஜபாளையம் மகளிர் கல்லூரியில் பிரபஞ்ச அறிவியல் சிறப்புரை

குற்ற சம்பவங்களை தடுக்க சொந்த செலவில் சிசிடிவி பொருத்திய இளைஞர்கள்