காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர வெள்ளி மாவடி சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் வெள்ளி மாவடி சேவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஏகாம்பரநாதர் சமேத ஏலவார்குழலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி சூரியபிரபை, சிம்மம், சந்திரபிரபை உள்பட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில், முக்கிய உற்சவங்களில் ஒன்றான வெள்ளி மாவடி சேவையில் நேற்று முன்தினம் இரவு ஏகாம்பரநாதர், தேர் பவனியில் வீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்….

Related posts

திண்டுக்கல் மாநகராட்சியில் வரி வசூல் தொகையில் ரூ.4.69 கோடி முறைகேடு: பெண் அதிகாரி உள்பட 2 பேர் சஸ்பெண்ட்

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு நிலங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும்: கிருஷ்ணசாமி கோரிக்கை

ஜாமீனில் வந்த சென்னை ரவுடி கோவை சிறை வாசலில் கைது: ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்டவரா?