காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் 132 டாஸ்மாக் கடைகளில் பேடிஎம் மூலம் பணம் வசூல்: மாவட்ட மேலாளர் நடவடிக்கை

 

காஞ்சிபுரம், மார்ச் 11: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால், டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கடும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், தமிழக அரசுக்கும் இதனால் கெட்ட பெயர் ஏற்படும் நிலை உருவானது.

இதனையடுத்து, தமிழ்நாடு அரசு உத்தரவின்பேரில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன், சென்னை மண்டல மேலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனையின்பேரில் டாஸ்மாக் கடைகளில் பேடிஎம் க்யூ ஆர் கோடு மூலமும், ஏடிஎம் கார்டு ஸ்வைப்பிங் இயந்திரம் மூலமும் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்த தமிழ்நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட எல்லையில் 132 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

இந்த 132 டாஸ்மாக் கடைகளில் பேடிஎம் க்யூ ஆர் கோடு மற்றும் ஏடிஎம் கார்டு ஸ்வைப்பிங் மெஷின் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேலாளர் ஷியாம்சுந்தர் தெரிவித்துள்ளார். இனிமேல், டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோர் சரியான விலையை கொடுக்க இது உதவியாக இருக்கும். மேலும் டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு கூடுதலாக பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஷியாம்சுந்தர் தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை