காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம், ஜூலை 16: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலை வெங்கச்சேரியில் செய்யாற்றின் குறுக்கே ₹22.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணி, மகரல் – காவந்தண்டலம் பகுதியில் ₹4 கோடி மதிப்பீட்டில் செய்யாற்றின் கரையை பலப்படுத்தும் பணி, வாலாஜாபாத் – அவளூர் சாலை பாலாற்றின் குறுக்கே ₹2.74 கோடி மதிப்பீட்டில் தரைபாலம் சீரமைப்பு பணி மற்றும் சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்டம் மூலம் ₹448 கோடி மதிப்பில் காஞ்சிபுரம் – செங்கல்பட்டு வரை இருவழிச்சாலை மற்றும் வாலாஜாபாத் புறவழிச்சாலை உள்ளிட்ட பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்ட கோட்ட பொறியாளர் லட்சுமிநாதன், உதவி கோட்ட பொறியாளர் முகுந்தன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் பெரியண்ணன், பொறியாளர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை