காஞ்சிபுரத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள்

காஞ்சிபுரம்: கள்ளக்குறிச்சி தனியார் பளளி சூறை எதிரொலியாக காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதன் எதிரொலியாக பள்ளியை பொதுமக்கள் சூறையாடினர். இது தொடர்பாக தமிழக அரசு தனியார் பள்ளிகள் விடுமுறை விடக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தது. தனியார் பள்ளியை சார்ந்த சங்கத்தினர், கள்ளக்குறிச்சி பள்ளி சூறையாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேண்டும் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்தனர். விதிகளை மீறி தனியார் பள்ளிகள் விடுமுறை விட்டால், தனியார் பள்ளிகள் மீது மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குரகம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றது. காஞ்சிபுரம் நகரில் சில தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வருகை தந்து கள்ளக்குறிச்சி அருகே பள்ளி சூறையாடிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்….

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரை ஜூலை 19 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

கட்டணமின்றி களிமண், வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியில் தாய் மற்றும் 2 குழந்தைகள் வீட்டில் சடலமாக மீட்பு