காங்கிரஸ் பேரணி ஜெய்ப்பூருக்கு மாற்றம்: தமிழக காங்கிரசாருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக நடத்தப்படும் பேரணி ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளதால் அங்கு செல்வதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் நிர்வாகிகள் செய்ய வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜ ஆட்சியில் விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டிக்கின்ற வகையில், மாபெரும் பேரணியை டிசம்பர் 12ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடத்துவதென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதற்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்ததால், தற்போது பேரணி நடைபெறுகிற இடம் அதேநாளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது.எனவே, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் கலந்துகொள்வதற்கு 12ம் தேதி ஜெய்ப்பூர் செல்ல வேண்டும் என்பதால் அதற்குரிய ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்