காங்கிரசார் சாலை மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு

சென்னை: சோனியா காந்தியிடம் 3வது நாளாக விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடசென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரசாருக்கும், போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஏற்கனவே 2 நாட்கள் டெல்லியில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகியிருந்த நிலையில், 3வது நாளாக நேற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஆஜராகியுள்ளார். இந்நிலையில் 3வது நாளாக நேற்றும் சென்னையில் மாவட்ட தலைவர்கள் தலைமையில் போராட்டங்கள் நடத்தினர். வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் ராயபுரம், சிமெண்ட்ரி ரோடு பெரியபாளையத்தம்மன் கோவில் அருகில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கவுன்சிலர்கள் தீர்த்தி, சுரேஷ், நிர்வாகிகள் துரைராஜ், சுகுமாரன், துரை, நஜ்மாஷெரீப் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, சோனியா காந்தியிடம் 3வது நாளாக விசாரணை நடத்துவதை கண்டித்து திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.  இதேபோன்று, சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ ராஜசேகரன் தலைமையில் சென்னை சூளைமேடு காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை