காங்கயம் வாரச்சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120க்கு விற்பனை

 

காங்கயம், அக்.31: காங்கயம் வாரச்சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டது. காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரம் தோறும் திங்கட்கிழமை சந்தை கூடும். இங்கு காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள், வீட்டு உபயோக பொருட்கள் முதற்கொண்டு அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கூடிய வார சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அவரை காய் கிலோ ரூ.100க்கும், வெண்டைக்காய் ரூ.80க்கும், தக்காளி கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டது. பெரிய வெங்காயம் மற்றும் அவரைகாய் விலை இல்லாததரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை காய் மற்றும் பெரிய வெங்காயத்தின் வரத்து குறைய தொடங்கி இருப்பதால் விலை ஏறி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை