கள்ளராதினிப்பட்டி கண்மாய்; கலுங்கை சீரமைக்க கோரிக்கை

சிவகங்கை: கள்ளராதினிப்பட்டி கண்மாய் கலுங்கை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை அருகே உள்ள கள்ளராதினிப்பட்டியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான கள்ளராதினிப்பட்டி கண்மாய் உள்ளது. சருகணி வடிநிலக்கோட்டம், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த கண்மாய் சிவகங்கை மாவட்ட எல்கையில் 60 ஏக்கர் பரப்பளவும், மதுரை மாவட்ட எல்கையில் 40ஏக்கர் பரப்பளவிலும் உள்ளது. இந்த கண்மாய் மூலம் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த கண்மாய் நிரம்பி நீர் வெளியேறுவதற்காக இரண்டு கலுங்குகள் உள்ளன. இதில் வடபுறம் உள்ள கலுங்கு பழுதடைந்த நிலையில் உள்ளது. சுமார் 10ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி இந்த கலுங்கு உள்ளதால், கண்மாய்க்கு நீர் வந்தால் இந்த கலுங்கின் வழியாக வெளியேறிவிடுகிறது. இதனால் கண்மாய் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே கலுங்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்களால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு பின்னர் விவசாயிகள் தொடர்நது வலியுறுத்திய பின்னர் மரங்கள் அகற்றப்பட்டன. தற்போது பழுதடைந்துள்ள 10 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி கலுங்கு உள்ளது. இந்த கண்மாயால் கள்ளராதினிப்பட்டி விவசாயிகள் மட்டுமல்லாது சுற்றப்புறத்திலுள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவர். எனவே வட கிழக்கு பருவ மழை தொடங்கும் முன் கலுங்கு மற்றும் நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்….

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு