கள்ளச்சாராயம் விற்பனையா? வாட்ஸ்அப்பில் புகார் கூறலாம்

 

விருதுநகர், ஜூன் 26: கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை தொடர்பாக வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: மாவட்டத்தில் புகையிலை பொருட்களான கணேஷ் புகையிலை, கூல் லிப், கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை, சட்ட விரோத மதுபான விற்பனை செய்வோரை பற்றி 90427 38739 என்ற எண்ணிலும், கஞ்சா விற்பனை தொடர்பாக 94439 67578 என்ற எண்ணிலும் வாட்ஸ்அப் மூலம் காவல்துறைக்கு தகவல் அளிக்கலாம்.

தகவல் தெரிவிக்கும் நபர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும். மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். கூல் லிப், புகையிலை, கஞ்சா விற்பனை செய்வோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்