கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி எதிரொலி: தொடர் கள்ளச்சாராய வேட்டையில் 13 பேர் கைது 600 லிட்டர் சாராயம் அழிப்பு

திருவண்ணாமலை, ஜூன் 23: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அதில், 600 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து, 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில், கலால் பிரிவு டிஎஸ்பி ரமேஷ் ராஜ் தலைமையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் மாவட்ட முழுவதும் கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அதன்படி, திருவண்ணாமலை தண்டராம்பட்டு செங்கம் தானிப்பாடி ஜவ்வாது மலை புகலூர் செய்யாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கள்ளச்சாராய வேட்டை நடந்தது அதில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 600 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. செங்கம் அடுத்த கட்டர் அணை கிராமத்தில், வீட்டுக்கு அருகிலும் கரும்பு தோட்டங்களிலும் லாரி டியூப்களில் பதுக்கி வைத்திருந்த 130 லிட்டர் கள்ளச்சாராயம்பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் இருந்து கள்ளச்சாராயம் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொண்டுவரப்படுகிறதா எனவும் கண்காணிக்கப்படுகிறது அதேபோல் ஜவ்வாது மலை பகுதியில் கள்ளச்சாராய ஊறல் தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு போலீசார் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை