கல்வியை 5ஜி மேம்படுத்தும்: பிரதமர் மோடி பெருமிதம்

அடலஜ்: ‘செல்போன்களின் 5ஜி சேவை, கல்வி முறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்’ என பிரதமர் மோடி கூறினார். குஜராத் மாநிலம், காந்தி நகர் மாவட்டம், அடலஜ் நகரில் மாநில அரசின் சிறப்பு பள்ளிகள் திட்ட துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், ‘‘ஒருவரின் ஆங்கில ஞானம் புத்திசாலி என கருதப்படுகிது. ஆனால், உண்மையில் ஆங்கிலம் என்பது தொடர்பு மொழிதான். ஆங்கில மொழியால் சிரமப்படுபவர்களுக்கு உள்ளூர் மொழிகளை பயன்படுத்துவது அவசியம். சமீபத்தில், அறிமுகப்படுத்தப்பட்ட 5 ஜி சேவை ஸ்மார்ட் வகுப்பறைகள், ஸ்மார்ட் பயிற்சிகள், ஸ்மார்ட் வசதிகள் உள்ளிட்டவைகளையும் மிஞ்சி நிற்பவை. இது நமது கல்வி முறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்,’’ என்றார்….

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு