கல்வராயன்மலையில் சாராய ரெய்டு-கள்ளத்துப்பாக்கி, சாராயம் பறிமுதல்

சின்னசேலம் : கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக் உத்தரவின் பேரில் மலைப்பகுதியில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு டிஎஸ்பி ரவிச்சந்திரன், திருக்கோவிலூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பாண்டியன், கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் பிரியா, கள்ளக்குறிச்சி கலால் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, கரியாலூர் எஸ்.ஐ. ராஜா ஆகியோர் தலைமையில் போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து மலைப்பகுதி முழுவதும் ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள மல்லிகைப்பாடி கிராம பகுதியில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நெடுஞ்செழின், மோகன் ஆகியோர் ரெய்டு சென்றனர். அப்போது ரங்கசாமி என்பவரின் வீட்டின் பின்புறம் அரசு அனுமதியில்லாத கள்ளத்துப்பாக்கி இருப்பதை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பகுதியில் ரெய்டு நடத்திய போது ஒரு பிளாஸ்டிக் கேனில் இருந்த 25 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கல்வராயன்மலையில் தொடர்ந்து ரெய்டு நடத்தி சாராயத்தை அழித்து கள்ளச்சாராயம் இல்லாத பகுதியாக கல்வராயன்மலை உருவாக்கப்படும் என்று டிஎஸ்பி ரவிச்சந்திரன் கூறினார்….

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்