கல்லூரி முதல்வர் டார்ச்சர்? நர்சிங் மாணவி தற்கொலை

குடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் கார்த்திகாதேவி (22). ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் அரகொண்டாவில் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் நேற்றுமுன்தினம் விடுதிக்கு சென்று மகளை வீட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர், கல்லூரி பெண் முதல்வர், தனது தேர்ச்சி சதவீதத்தை குறைத்துவிடுவதாக கூறி அடிக்கடி டார்ச்சர் செய்து வருவதாகவும், இதனால் மனவேதனையாக உள்ளதாகவும் கூறி அழுதுள்ளார். இந்நிலையில், நேற்று மாணவி கார்த்திகாதேவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். கல்லூரி முதல்வர் டார்ச்சரால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்….

Related posts

விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது: தமிழ்நாடு அரசு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரை ஜூலை 19 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

கட்டணமின்றி களிமண், வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்