கல்லூரி மாணவர் கொலை கிரீஷ்மாவை வீட்டிற்கு அழைத்து வந்து கேரள போலீஸ் விசாரணை

களியக்காவிளை: குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கிரீஷ்மா வீட்டிற்கு அவரை அழைத்து வந்து கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். குமரி மாணவர் ஷாரோன் கொலை வழக்கில் கிரீஷ்மா, தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை காவலில் எடுத்து குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கிரீஷ்மா, நிர்மல்குமார் ஆகியோரை கேரள குற்றப்பிரிவு போலீசார் குமரி மாவட்டம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் கிரீஷ்மாவை நேற்று பகல் 12 மணியளவில் பளுகல் அருகே ராமவர்மன்சிறை பூம்பள்ளிக்கோணம் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு கேரள மாநில குற்றப்பிரிவு  டிஎஸ்பி ஜாண்சன் தலைமையிலான போலீசார் அழைத்து வந்தனர். அங்கு கிரீஷ்மாவிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் அவர் பல திடுக்கிடும் தகவல்களை கூறியதாக தெரிகிறது. மாணவரை கொலை செய்ய 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டதாகவும், இதற்காக குமரி மாவட்டத்தில் திற்பரப்பு, சிற்றாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும், கேரள மாநிலம் விழிஞ்ஞம், பொழியூர், பூவாறு உள்ளிட்ட பகுதிகளுக்கும் அழைத்துச்சென்றதாகவும், அங்கு பலமுறை கொலை முயற்சியில் ஈடுபட்டும் பலனளிக்கவில்லை என்றும் தெரிவித்ததாக தெரிகிறது.தொடர்ந்து அங்கிருந்து அவரை அழைத்துக்கொண்டு  களியக்காவிளை மேக்கோடு வன்னியூர் பகுதியில் உள்ள தாய் மாமா நிர்மல்குமார் வீட்டிற்கு வந்தனர். அங்கு நிர்மல் குமாருடன் சேர்த்து  விசாரணை  நடந்தது. பின்னர் அவர்கள் திருவனந்தபுரம் திரும்பிச்சென்றனர். இந்த விசாரணையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது….

Related posts

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!

காஷ்மீரில் 2 இடங்களில் மோதல்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: போலீஸ் ஏட்டு பலி; 6 வீரர்கள் காயம்