கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்

பாப்பிரெட்டிப்பட்டி, ஆக.25: பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆவாரங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகள் சண்முகப்பிரியா(20). இவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை கல்வியியல் படிப்பு படித்து வந்தார். தினசரி கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தார். கடந்த 22ம் தேதி காலை, வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால், திடுக்கிட்ட பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காதால் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, மாணவியை தேடி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை