கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 2022ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வௌியிட்ட அறிக்கை:கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, வீரதீர செயலுக்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தனித்தன்மையுடன் கூடிய வீரமான, தைரியமிக்க, எதையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்மணிக்கு சிக்கலான தருணங்களில் சாதுர்யமாக செயல்பட்டு உயிர்காத்த அவரது ஆற்றல்மிக்க நடவடிக்கைக்காக கல்பனா சாவ்லா விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், 2022ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது. மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இணைய தளத்தின் முகவரி www.sdat.tn.gov.in பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ஆன்லைனில் https://awards.tn.gov.in/ பதிவேற்றம் செய்து இதனுடன் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் 30.6.2022க்குள் பதிவேற்றம் செய்தல் வேண்டும். விண்ணப்பங்களை நேரடியாக சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதன் அசல் நகலை தலைமை அலுவலகம், உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு சென்னை 600003 என்ற முகவரிக்கு வரும் 26ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாக சமர்பித்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்….

Related posts

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: ஒரு மகன் மீட்பு

ஏடிஎம் மெஷினை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை