கல்கண்டு பொங்கல்

செய்முறைபச்சரிசியை வெறும் வாணலியில் வறுத்து 2 கப் நீர் விட்டு குழைய வேக விடவும். வெந்ததும் 1 கப் பால் சேர்த்து மேலும் குழைய விடவும். பட்டன் கல்கண்டினை 1/2 கப் நீர் விட்டு கம்பிப்பதம் பாகு வைக்கவும். அதனை குழைய வெந்த சாதத்தில் சேர்த்து மேலும் இரண்டு கொதி விடவும். இடையிடையே 6 டேபிள் ஸ்பூன் நெய்யைச் சேர்க்கவும். லெமன் புட்கலர், ஏலப்பொடி இரண்டையும் சேர்த்துக் கலந்து மீதியுள்ள 2 டேபிள் ஸ்பூன் நெய்யில் முந்திரித் துண்டுகள் வறுத்துச் சேர்த்து இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விடவும்.குறிப்பு: லெமன் புட்கலர் சேர்க்காமலும், கல்கண்டு பொங்கல் தயாரிக்கலாம். பொங்கலன்று இந்தப் பொங்கலும் செய்து படைப்பர்.

Related posts

மேங்கோ மலாய் கேக்

ஜவ்வரிசி அல்வா

ரவா தேங்காய்ப்பால் அல்வா