கலைஞர்களுக்கு கைத்திறன் போட்டி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்ப கல்லூரி வளாகத்தில் பூம்புகார் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் அடுத்த தலைமுறை கைவினை கலைஞர்களுக்கான கைத்திறன் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இதையடுத்து, இந்தாண்டு கைத்திறன் போட்டி நடத்த முடிவு செய்து, அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரியில் நடந்தது.  இதில், 76 மாணவர்கள் கலந்து கொண்டு கற்சிற்பம், மரச்சிற்பம், பஞ்சலோக சிற்பம், மரபு சார்ந்த ஓவியங்கள் வரைந்து தங்களது திறமையை வெளிக்காட்டினர். மேலும், மாணவர்கள் செதுக்கிய சிற்பங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு கைத்திற தொழில்கள் வளர்ச்சி கழகத்துக்கு அனுப்பி உள்ளன. அதில், சிறந்த சிற்பத்தை தேர்ந்தெடுத்து அடுத்த தலைமுறைக்கான விருது வழங்கப்படும் என கூறப்படுகிறது. மாணவர்கள், செதுக்கிய சிற்பங்களை தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழக மேலாளர் சோலைராஜ், கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், கற்சிற்ப பயிற்றுனர் பாலகிருஷ்ணன், மூத்த சிற்பி பாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை