கலெக்டர் அலுவலக பகுதியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கருர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகம் அடுத்தடுத்து உள்ளன. இந்த ஒருங்கிணைந்த வளாக பகுதியை சுற்றிலும் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால், இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்கள் அனைவரும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றிலும் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கட்டுங்கடங்காமல் சுற்றித்திரியும் தெரு நாய்களால் அனைத்து தரப்பினரும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய ரேஷன் கடை திறப்பு

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை