கலெக்டர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, பிப். 16: தேனி கலெக்டர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிதி காப்பாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சரவணமுத்து முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, நிதி பற்றாக்குறையால் நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு சலுகை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், அரசு அலுவலர்களுக்கு 7வது ஊதிய குழு நிர்ணயத்தில் 21 மாதம் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் எனவும், அனைத்து துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும், சத்துணவு அங்கன்வாடி, ஊர் புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதிய திட்டத்தில் பணிபுரியக்கூடியவர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் எனவும் அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கும் பழைய நிலையிலேயே உயர் கல்விக் குழு பகுதியும் வழங்க வேண்டும்,

புதிய ஓய்வூதியத்திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் சத்துணவு ஊழியர்கள் உள்ளாட்சி பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் சென்னமராஜ் நன்றி கூறினார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை