கலவை காவல் நிலையம் சார்பில் ஆதரவற்ற முதியோருக்கு மளிகை தொகுப்பு-இன்ஸ்பெக்டர் வழங்கினார்

கலவை : கலவை காவல் நிலையம் சார்பில் ஆதரவற்ற  முதியவர்களுக்கு இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி அரசி மற்றும் மளிகை தொகுப்பை வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால், ஆதரவற்ற முதியவர்கள் தங்களுக்கு உணவு கிடைக்காததால் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.அவ்வாறு ஆதரவற்ற நிலையில் உள்ள முதியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் செய்ய வேண்டும் என எஸ்பி சிவக்குமார்  உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, கலவை தாலுகாவுக்கு உட்பட்ட அரும்பாக்கம்  பகுதியில்  ஆதரவற்ற நிலையில் வசித்து வந்த முதியவர்களுக்கு கலவை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய  தொகுப்பை வழங்கினார். …

Related posts

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்

மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதி வழங்கி நிதியை ஒதுக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்