கற்றல் விளைவு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி உத்தரகாண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியவர்கள் நலமுடன் திரும்ப அன்னவாசல் அரசு பள்ளி மாணவிகள் கூட்டு பிரார்த்தனை

விராலிமலை, நவ.29: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருக்கும் சில்கியாரா சுரங்கப்பாதை கட்டுமானத்தின் போது கடந்த நவம்பர் 12ம் தேதி சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். தொழிலாளர்களை மீட்கும் பணி 17வது நாளாக நேற்று நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜன், உணவு, தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 41 தொழிலாளர்களையும் பத்திரமாக வெளியே கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் நவீன இயந்திரங்கள் கொண்டு சிக்கியவர்களை மீட்கும் பணியில் பல கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில், எலி துளை சுரங்கம் தோண்டும் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறுகிய விட்டம் கொண்ட சுரங்கங்களைத் தோண்டுவதில் வல்லவர்களான எலிவளை சுரங்கத் தொழிலாளர்களை பயன்படுத்தி தொழிலாளர்களை மீட்பதற்கான சுரங்கம் தோண்டப்பட்டது எலிகளைப் போலவே, நெருக்கடி மிக்க சிறிய குகைகளுக்குள் சென்று துளையிடுவதில் அனுபவம் வாய்ந்தவர்களே எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள். 80 செ.மீ., அதாவது சுமார் இரண்டரை அடி அகலமுள்ள குழாய் மூலம் உள்ளே சென்று, சுரங்கத்தை தோண்டினர்.

இந்தநிலையில் கடந்த 17 நாட்களாக சுரங்கப் பாதையில் சிக்கியவர்கள் நலமுடன் திரும்ப வேண்டும் என்று அன்னவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் நேற்று காலை பள்ளி வளாக்தில் நடைபெற்ற பிரேயரில் கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர். சுரங்கப்பாதையில் நேற்று இரவு அனைவரும் நலமுடன் திரும்பினர் என்பது குறிப்பிடதக்கது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை