கறம்பக்குடியில் 39 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் வாபஸ்

கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க கோரியும் மருத்துவமனையில் 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வலியுறுத்தி மருத்துவமனை மீட்பு குழுவினர் 30 நாட்களுக்கு மேலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கறம்பக்குடி வியாபாரிகள் சங்கம், வர்த்தக சங்கம் சார்பாகவும் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது. இது தொடர்பாக கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சின்னதுரை சட்ட மன்ற கூட்ட தொடரில் இந்த மருத்துவ மனைக்கு அனைத்து வசதிகளையும் நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் இது தொடர்பாக புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே. செல்லபாண்டியன் மற்றும் கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் முருகேசன் ஆகியோர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் மருத்துவ துறை சார்ந்த செயலாளர்களையும் சந்தித்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 39 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவமனை மீட்பு குழுவினரை எம்எல்ஏ சின்னதுரை, புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே. செல்லபாண்டியன், கறம்பக்குடி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன், கறம்பக்குடி பேரூராட்சி திமுக தலைவர் முருகேசன் ஆகியோர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை