கர்நாடகாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு; 144 தடை உத்தரவு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மற்றொரு சமூகத்தை சேர்ந்த பெண்களை கிண்டல் செய்ததாக தகராறு ஏற்பட்டு அந்த தகராறு வன்முறையில் முடிந்துள்ளது.இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் சில கடைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பத்தில் 7 காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று இரவு முதல் கோரூர் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை 18 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்….

Related posts

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு..!!

ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை