கரூர் ராயனூர் பொன் நகரில் நிழற்குடை அமைக்க வேண்டும்

கரூர், ஏப். 21: கரூரில் இருந்து திண்டுக்கல், பாகநத்தம், ஈசநத்தம் மற்றும் திருச்சி பைபாஸ் சாலை செல்லும் அனைத்து பேரூந்துகளும் ராயனுர் பொன் நகர் வழியாக செல்கிறது.
இதே போல், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பள்ளி, கல்லூரி வாகனங்களும் இந்த பொன் நகர் சந்திப்பு வழியாக செல்கிறது. தினமும் நு£ற்றுக்கணக்கானோர் இந்த பொன் நகர் சந்திப்பு பகுதியில் இருந்து பேரூந்துகளில் ஏறிச் செல்கின்றனர்.

ஆனால், நான்கு வழிப் போக்குவரத்து நடைபெறும் இந்த பகுதியில் நிழற்குடை இல்லாமல் உள்ளது. ஏற்கனவே இருந்த நிழற்குடையும் அகற்றப்பட்டுள்ளது. எனவே, அனைவரின் நலன் கருதி பொன் நகர் சந்திப்பு பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொன் நகர் சந்திப்பு பகுதியில் மக்கள் நலன் கருதி நிழற்குடை அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை