கரூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர்: கரூர் மாவட்டம் முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சில இடங்களில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 652.20 மி.மீ ஆகும். இந்த மழையளவை மாவட்டம் எட்ட, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழைதான் மிகவும் உதவியாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலக் கட்டத்தில் கரூர் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க மழை பெய்யவில்லை. மாறாக, சுட்டெரிக்கும் வெயில்தான் வாட்டி வந்தது. தென்மேற்கு பருவமழையும் பொய்த்த நிலையில், வடகிழக்கு பருவமழை காலமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையுள்ள காலக் கட்டத்திலாவது கரூர் மாவட்டம் கூடுதல் மழையை பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் பொதுமக்களும், விவசாயிகளும் இருந்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை