கரூர் மாநகராட்சி ராஜாஜி தெருவில் திறந்த நிலையில் வடிகால் பள்ளம்

கரூர், ஏப். 13: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜி தெருவில் திறந்த நிலையில் உள்ள வடிகால் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சர்ச் கார்னர் பகுதியை ஒட்டி ராஜாஜி தெரு உள்ளது. கரூரில் இருந்து வாங்கல், நெரூர், சோமூர், திருமுக்கூடலு£ர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ராஜாஜி சாலையின் வழியாக சென்று வருகிறது. அதிகளவு வாகன போக்குவரத்து மற்றும் குடியிருப்புகள் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சாலையோரத்தில் நடைபாதை அமைக்கப்பட்டு, சாக்கடை சீரமைப்பு பணிக்காக இடைவெளி விடப்பட்டுள்ளது.

அவ்வாறு நடைமேடையில் இடைவெளி விடப்பட்ட இடம் சரியாக மூடாமல் திறந்த நிலையில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. இரவு நேரங்களில் பாதசாரிகள் நடந்து செல்லும் போது இதில் விழுந்து விடவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, நடைமேடையில் திறந்த நிலையில் உள்ள இந்த வடிகால் பள்ளத்தை விரைந்து மூட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு மூடுவதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related posts

காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளது: எஸ்.பி. சாய்பிரனீத் பேட்டி

குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காஞ்சி கலெக்டர்