கரூர்- கோவை சாலை லட்சுமிபுரம் பகுதியில் சாலையோரம் மணற்பரப்பினை அகற்ற வேண்டும்

க.பரமத்தி: கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் பகுதியில் இருபுறமும் சேர்ந்துள்ள மணற்பரப்பினை அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரிலிருந்து கோவை திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் செல்வதுடன் சென்றுவிட்டு திரும்ப வரும் அனைத்து வாகனங்களும் க.பரமத்தி தென்னிலை வழியாக செல்கின்றன. இதில் காருடையாம்பாளையம் அடுத்த லட்சுமிபுரம் பகுதி நெடுஞ்சாலையில் சாலையின் இருபுறமும் ஏராளமான மணற்பரப்பு குவிந்து கிடக்கிறது.

இதனால் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் வரும் பலரும் பின்னால் வேகமாக வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்க நினைத்து ஒதுங்கும்போது மணல் சறுக்கி விபத்துக்குள்ளாகின்றனர். ஆகவே இந்த சாலையில் கிடக்கும் மணல் காற்று வீசும் நேரங்களில் அவ்வப்போது பறந்து வந்து வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் காருடையாம்பாளையம் அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் இருபுறமும் சேர்ந்துள்ள மணற்பரப்பினை அகற்றி பாதுகாப்பான போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் உடனே அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை