கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் கொடிமர கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

 

கரூர், பிப்.2: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் கொடிமர கும்பாபிஷேகம் நடைபெற்றது. கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் கொடிமரம் மாற்றப்பட்டு, தற்காலிகமாக மூங்கிலான கொடிமரம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, கோயிலில் புதியதாக கொடிமரம் செய்யும் விழா நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, புதிய கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கலச புறப்பாடும் நடைபெற்றது. இதனையடுத்து, கொடிமரத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், கருர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை