கரூர் அமராவதி ஆறு தண்ணிரின்றி வறண்டது

கரூர், மே 4: கரூர் மாநகரின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் பெரும்பாலான பகுதிகள் தண்ணிரின்றி வறண்டே காணப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் இருந்து புறப்படும் அமராவதி ஆறு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த ஆற்றில் ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை சமயங்களில் பெய்யும் மழையின் காரணமாக ஆற்றில் அதிகளவு வெள்ளம் வந்து, கரைபுரண்டு ஓடி, திருமுக்கூடலு£ரில் காவிரி ஆற்றில் கலக்கிறது.கரூர் மாவட்டம் ராஜபுரம், அரவக்குறிச்சி, செட்டிப்பாளையம், பெரியாண்டாங்கோயில் வழியாக கரூர் மாநகருக்குள் வந்து மேலப்பாளையம் வழியாக காவிரி ஆற்றில் கலக்கும் இந்த அமராவதி ஆறு மூலம் கரூர் மாவட்டத்தில் ஏராளமான நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

தற்போதைய நிலையில், கோடை வெயில் காரணமாக வெயில் வாட்டி வருவதால், அமராவதி ஆற்றின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரின்றி வறண்டே காணப்படுகிறது. ஆங்காங்கே தென்படும் தண்ணீரில் கால்நடைகள் மேய்ந்து
தங்களின் தாகத்தை தீர்த்து வருகிறது. இருப்பினும், கரூர் மாநகர பகுதியின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் பெரும்பாலான பகுதிகள் வறண்டே காணப்படுகிறது. மே மாதத்தில் பெய்யும் கோடை மழை, மற்றும் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழையின் போது அமராவதி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும் என்பதால் அனைவரும் அந்த நாளை எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்