கருப்பு பூஞ்சை தொற்றை அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிட்டது தமிழக அரசு

சென்னை: கருப்பு பூஞ்சை தொற்றை அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிட்டது தமிழக அரசு. சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள்  நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கருப்பு பூஞ்சை (மியூகோர்மைகோசிஸ்)  குறித்து பொதுமக்களுக்கு  தேவையற்ற பீதி இருக்க வேண்டியது இல்லை. இது  ஏற்கனவே இருக்கக்கூடிய நோய் தான். கொரோனாவுக்கு பிறகு புதிதாகக் கூடிய நோய்  என்றும், இது இறப்பை ஏற்படுத்தும் என்பது போல சமூக வலைதளங்களில் வதந்தி  பரவி வருகிறது. அதீத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்டீராய்டு மருந்து  எடுப்பவர்கள், ஐசியூவில் பல நாட்களாக இருப்பவர்களுக்கும், சில தெரபிகள்  எடுத்து கொள்பவர்களுக்கும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு  இருப்பதாக கூறப்பட்டு  வந்தது. இது அறிவிக்கப்பட்ட நோயாக பொது  சுகாதாரத்துறையின் கீழ் அறிவிக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்தார். அந்த  வகையில் கருப்பு பூஞ்சை தொற்று அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிடப்படுகிறது. அரசு மற்றும் தனியார்  மருத்துவமனைகளில் இந்த  நோய் கண்டறியப்பட்டால், பொது சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இது  குணப்படுத்தக்கூடிய நோய். சைனஸ் பிரச்னை உள்ளிட்ட அறிகுறி இருந்தால்  உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.  இந்த நோய் குறித்த ஆய்வு  மேற்கொள்ள 10 பேர் அடங்கிய டாக்டர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.கருப்பு  பூஞ்சை நோய் குறித்த தேவையற்ற பீதியோ, பதற்றமோ வேண்டாம். இதற்கு தேவையான  ஆம்போடெரிசின் என்ற மருந்து தமிழக மருத்துவ பணிகள் கழகத்திடம் இருந்தபோதிலும், இன்னும் 5 ஆயிரம் குப்பிகளுக்காக ஆர்டர்  கொடுக்கப்பட்டுள்ளது. 9  நபர்கள் இதுவரை கருப்பு பூஞ்சை நோய் பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதில் 7 பேர் சர்க்கரை நோயாளிகள், 2 பேர் சர்க்கரை நோய் அல்லாதவர்கள், கண்  பாதிப்பு உள்ளவர்கள் 7 பேர். இவர்கள் அனைவரும்  நலமுடன் உள்ளனர்.  இவர்களுக்கான சிகிச்சை தொடங்கி விட்டது.  இவ்வாறு அவர் கூறினார்.கருப்பு பூஞ்சை தொற்றை அறிவிக்கப்பட்ட  நோயாக பட்டியலிட்ட அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. அறிவிக்கப்பட்ட நோய் என  பட்டியலிடப்பட்டால், அந்த நோய் குறித்த தகவல்களை அனைத்து அரசு, தனியார்  மருத்துவர்களும் பொது  சுகாதார துறையின் உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்க  வேண்டும். * கருப்பு பூஞ்சை குறித்து பொதுமக்களுக்கு தேவையற்ற பீதி இருக்க வேண்டியது இல்லை.* கொரோனாவுக்கு பிறகு புதிதாக கூடிய நோய் என்றும், இறப்பை ஏற்படுத்தும் என்பது போலவும் வதந்தி பரவி வருகிறது….

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு