கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள்

 

தஞ்சாவூர் செப்.25: தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கழக ஆசிரியர்கள் பள்ளிகளில் கருப்பு பட்டை அணிந்து பணி செய்தனர். கடந்த ஓராண்டாக சிறு சிறு பிரச்சனைகளைக் காரணம் காட்டி தொடர்ச்சியாக மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிடை நீக்கம், பணியிட மாற்றம் செய்யப்படுவதை கண்டித்து நேற்று தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக ஆசிரியர்கள் பள்ளிகளில் கருப்பு பட்டை அணிந்து தங்களது பணிகளை செய்தனர்.

அதன்படி தஞ்சாவூர் தென் கீழ் அலங்கம் பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து பள்ளியில் பணிபுரிந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று மாலை தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு