கம்பைநல்லூர் வாரச்சந்தையில் ₹25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

அரூர், மே 19: கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆட்டுச்சந்தை கூடுகிறது. அரூர், ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆடுகளை விற்பனைக்கு ஓட்டி வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சந்தைக்கு வருகின்றனர். இந்தவார சந்தையில் 250க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகாலையிலேயே சந்தையில் குவிந்த வியாபாரிகள் ஆடுகளை ேபாட்டி போட்டு வாங்கினர். ஆடுகள் எடைக்கேற்ப ₹5,500 முதல் ₹9,500 வரை விற்பனையானது. ஒட்டு மொத்தமாக சந்தையில் ₹25 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

பூங்கா வளாகத்தில் செடிகளுக்கு தீவைப்பு பாம்பன் பாலத்தை சூழ்ந்த புகை மண்டலம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் எம்எல்ஏ முருகேசன் வழங்கினார்

மாரியம்மன் கோயிலில் கொள்ளைக்காரன் பூஜை