கபாலீஸ்வரர் கோயிலில் இன்று நடைபெறும் பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி இணையதளத்தில் நேரலை: அறநிலையத்துறை தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாட்டு நிகழ்ச்சி இன்று 4.30 மணி அளவில் நேரடியாக MYLAPOREKAPALEES WARARTEMPLE  என்ற யூடியூப் சேனல் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதன்படி மாலை 4.30 மணிக்கு நந்தி அபிஷேகமும், அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் உள் புறப்பாடும், பக்தர்களின் கோரிக்கையின்படி  ஒளிபரப்பப்படவுள்ளது.  இந்நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு தரிசித்து அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய அருள்மிகு கபாலீஸ்வரர் திருவருள் பெற்றிட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதேபோல், திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி கோயிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில்  ஒன்றான பிரதோஷ வழிபாடு ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  பக்தர்கள் Thiagarajaswamy Vadivudaiyamman TempleOfficial  என்ற யூடியூப் சேனல் மூலம் இதை காணலாம். இன்று  மாலை 4 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் தரிசித்து அருள்மிகு வடிவுடை அம்மன்  உடனுறை தியாகராஜ சுவாமி அருள் பெறலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை