கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியலில் ₹69 ஆயிரம் காணிக்கை

கன்னியாகுமரி, ஜூலை 30 : தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலும் ஒன்று. இக்கோயிலுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் தினமும் 1000க்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர். இங்கு தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் இந்த அன்னதான திட்டத்தில் உணவு அருந்தி பயன்பெற்று வருகின்றனர். இந்த அன்னதானம் திட்டத்திற்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக பகவதி அம்மன் கோயிலில் உண்டியல் ஒன்று தனியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியலை மாதம் ஒருமுறை எண்ணுவார்கள். இந்த நிலையில் கன்னியாகுமரி கோயில் மேலாளர் ஆனந்த் தலைமையில் உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணப்பட்டது. இந்த அன்னதான உண்டியலில் மொத்தம் ரூ.69 ஆயிரத்து 333 கிடைத்தது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து