கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதி பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு

நாகர்கோவில், நவ.16: கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது ஆய்வுப் பயணத்திட்டத்தின் கீழ் 91-வது ஆய்வை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டாறு பகுதியில் அமைந்துள்ள கவிமணி தேசிக விநாயகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். 1860ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியின் சேவையினைப் பாராட்டினார். கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி பி.எஸ்.பிருந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து, புத்தகத்தைப் பரிசளித்தார். அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வழுக்கம்பாறையில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமான கட்டமைப்பிற்கும், அப்பள்ளியில் ‘தமிழ் மொழி கற்போம்’ திட்டத்தின் கீழ் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்ட உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். ஆய்வில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை