கனமழையால் 59 விமானங்கள் தாமதம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகள், மற்றும் உள்நாட்டிற்குள் இயக்கப்படும் விமானங்கள் நேற்று தாமதமாக புறப்பட்டு சென்றன. குறிப்பாக, சென்னையிலிருந்து அபுதாபி, சார்ஜா, துபாய், கத்தார், ஓமன், குவைத், இலங்கை, லண்டன், டாக்கா ஆகிய நாடுகளுக்கு செல்லும் 13 சர்வதேச விமானங்கள் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டன. இதேப்போல், கொல்கத்தா, டில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, கோழிக்கோடு,தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, அந்தமான், கோவா உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 46 உள்நாட்டு விமானங்கள் 15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. ஆனால், வெளிநாடுகள், வெளியூர்களிலிருந்து சென்னை விமான நிலையம் வரும் விமானங்கள் அனைத்தும் தாமதமின்றி குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தன. விமானங்கள் தாமதமாக புறப்படுவதற்கு காரணம், பலத்த மழையால் பயணிகளின் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தாமதம், விமானங்களில் உணவு பொருட்கள் ஏற்றுவதில் தாமதம் உள்ளிட்டவையே என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு