கனமழையால் சாலை சேதம்: போக்குவரத்துக்கு விவசாயிகள் அவதி

வருசநாடு: வருசநாடு அருகே, கனமழையால் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்ததால், போக்குவரத்துக்கு விவசாயிகள் அவதிப்படுகின்றனர். மேகமலை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், வருசநாடு அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட காந்திகிராமம், முத்துநகர், மலைக்கிராம சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். மேலும், விவசாயிகள் பீன்ஸ், அவரை, எலுமிச்ச்சை உள்ளிட்ட விளை பொருட்களை கொண்டு செல்ல அவதிப்படுவதாகதெரிவிக்கின்றனர். இது குறித்து முத்துநகர் பொதுமக்கள் கூறுகையில், ‘கனமழை பெய்தால் இப்பகுதி சாலைகள் குண்டும், குழியுமாக சேதமடைகின்றன. சாலைகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்….

Related posts

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை