கனடாவின் லேங்கலி நகரில் மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு: வீடற்ற இங்கிலாந்து குடிமக்கள் பலர் இறந்திருக்கலாம் என அச்சம்..!

ஒட்டாவா: கனடாவில் வாழும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கனடாவில் லேங்கலி நகரில் உள்ள இங்கிலாந்து குடிமக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்ற மர்ம நபர் ஒருவர் அங்குள்ள வீடற்றவர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார். இதில், பலரது உடலில் தோட்டாக்கள் பாய்ந்தன. கனடா நேரப்படி காலை 6.30 மணிக்கு அந்த மர்ம நபர் நடத்திய கொலை வெறி தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடந்தி வருகின்றன. துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களில் பொதுமக்கள் யாரும் குழும வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த கோரத்தாக்குதலில் எத்தனை பேர் மரணமடைந்தனர் என்ற உறுதியான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. பொதுவாக, அமெரிக்காவை காட்டிலும் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு அதிகம் நடைபெறும் இடமாக கனடா உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.     …

Related posts

உடல் எடை குறைந்துகொண்டே வந்த வேதனையில் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட இன்ஸ்டா பிரபலம் திடீர் தற்கொலை

ஏமனில் அமெரிக்க டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது: ஹவுதிகள் தகவல்

லெபனானில் தொடர் வான்வழி குண்டுவீச்சை தொடர்ந்து தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: பதிலடி தர காத்திருப்பதாக ஹிஸ்புல்லா அதிரடி