கந்தர்வகோட்டை பகுதியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்

 

கந்தர்வகோட்டை, ஜூலை22: கந்தர்வகோட்டை பகதியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க ஆடி மாதத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் செல்கிறனர். ஆடிமாதம் தோறும் விரதம் இருந்து மஞ்சள் நிற ஆடை உடுத்தி, மாலை அணிந்து சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க செல்கின்றனர். மேலும் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மக்கள் பேறு, குறையாத செல்வம், நிறைய கல்வி, நோய் நொடி அற்ற வாழ்வு, கிடைப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

ஆண்டுக்காண்டு பக்தர்கள் கூடுவதாக தெரிவிக்கும் நிலையில் பாதயாத்திரை குழு பக்தர்கள் செல்லும் பாதை ஓரங்களில் நகரும் கழிவறை அமைந்து தரவேண்டும். சாலை வளைவுகளில் ஒளிரும் தன்மை கொண்ட காகிதம் ஒட்டி முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும். இரவு நேரங்களில் ரோந்து போலீஸ் அமைந்து ஆடிமாதம் முழுவதும் பக்தர்களுக்கு பாதுகாப்பு செய்து தரவேண்டும் என பக்தர்கள் கேட்டுக்கொண்டனர். கந்தர்வகோட்டை வழியே, ஊரணிபுரம், திருவோணம், கறம்பக்குடி இந்த ஊர்களை சேர்ந்த பக்தர்கள் இவ்வழியே செல்கிறார்கள்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து