கதறும் தாய், தந்தை..!: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலுக்கு உறவினர்கள், கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி..கிராமம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு..!!

கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி மாணவி உடலுக்கு கிராம மக்கள், உறவினர்கள் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாணவி இறுதி ஊர்வல நிகழ்வில் உறவினர்கள், ஊர் மக்கள் மட்டுமே கலந்து கொள்ள காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மாணவி உடலுக்கு அமைச்சர் அஞ்சலி:மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர், ஐ.ஜி.க்கள் மலர் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மாணவி உடலுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் இறுதி அஞ்சலி செலுத்தினர். மாணவி இறுதிச் சடங்கு: உள்ளூர் மக்களுக்கு அனுமதி கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் இறுதி சடங்கில் உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவி இறுதி சடங்கில் வெளிநபர்களுக்கு அனுமதி கிடையாது என்று போலீஸ் அறிவித்துள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டில் பெரியநெசலூர் கிராமம்:மாணவியின் இறுதி சடங்கு நடைபெறும் வேப்பூர் பெரியநெசலூர் கிராமம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. பெரியநெசலூர் கிராமத்திற்குள் வருபவர்கள் போலீஸ் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கிராமத்துக்குள் நுழையும் வாகனங்களின் எண்,  ஓட்டுநர் பெயர் எழுதப்பட்டு சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றன. திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் வேப்பூர் – சேலம் சாலையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். பெரியநெசலூர் கிராமத்தில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாணவி இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் தீவிரம்:கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள மாணவி வீட்டில் இறுதி சடங்கு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. …

Related posts

எனது தோல்விக்கான காரணம் கடவுளுக்கு தெரியும்: ஒரு மாதத்திற்கு பிறகு விருதுநகரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த விஜயபிரபாகரன்

நியோமேக்ஸ் மோசடி: 15 மாதங்களில் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட் கிளை ஆணை

லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளர் கைது